Jan 6, 2014

Fedora 20 - அழகானது !





இந்த மாதம் LINUX FOR YOU இதழோடு வந்த DVD யில் Fedora 20 இயங்குதளம் கொடுக்கப்பட்டது. எப்படித்தான் இருக்கிறது? என்று மடிக்கணினியில் நிறுவிப்பார்த்தேன். நிறுவுதல் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. Partition செய்வது மிகவும் குழப்பமாக இருக்கிறது.

மடிக்கணினியினுடைய அனைத்து வன்பொருள்களையும் நன்றாக ஆதரித்தது. Screen Brightness ஐ மட்டும் கூட்டுவது, குறைப்பது முடியவில்லை.

தமிழ் தட்டச்சை ibus மூலமாக செய்ய முடிந்தது, Libreoffice 4 இருந்தது. NTFS கோப்புமுறைமையை அணுக முடிந்தது.

Fedora 20 பதிப்பை என்னுடைய External Hard Disk மூலமாகத்தான் மடிக்கணினியில் நிறுவினேன். ஏற்கனவே மடிக்கணினியில் Windows 7+Ubuntu 12.04.2 LTS இருந்தது. மூன்றாவதாக Fedora 20 ஐ நிறுவினேன். Fedora மூலம் Boot Loader ஐ நிறுவாமல், பின்பு உபுண்டுவின் Grub Menuவில் Fedora வின் தகவல்களை இணைத்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் பூட் ஆகியது.

Externel Hard Disk மூலமாக நிறுவியதையும், Boot Loader -ல் Fedora 20 ஐ இணைத்த கதையையும் பின்பு பதிவு செய்கிறேன்.


1 comment:

mani said...

wow.. beautiful..