Jan 11, 2014

உபுண்டு 12.04 LTS பதிப்பில் கூகுள் குரோம் இணைய உலாவியை நிறுவுதல்

கூகுள் குரோம் இணைய உலாவியை நாம் உபுண்டு லினக்ஸிலும் நிறுவி பயன்படுத்த முடியும். நெருப்பு நரி(Mozilla Firefox) இணைய உலாவியுடன் ஒப்பிடும் போது குரோம் இணைய உலாவி பயன்படுத்துவதற்கு சிறப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது. நெருப்புநரி உலாவியில் இரண்டு, மூன்று Tab களுக்கு மேல் திறந்து பயன்படுத்தும் போது சில நேரங்களில் ஸ்தம்பித்து விடுகிறது. இது ஒரு மிகப்பெரிய குறையாக நெருப்பு நரியில் இருந்து வருகிறது.

குரோம் உலாவியை நிறுவுதல்:

முதலில் இந்த முகவரிக்குச் சென்று உலாவியை தரவிறக்கம் செய்யவும்.





.deb வடிவில் தரவிறக்கம் ஆகும். Home/Downloads அடைவிற்குள் தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு சேமிக்கப்பட்டிருக்கும். முனையத்தை திறந்து cd Downloads எனும் கட்டளைவரியை கொடுத்து Enter Key யை அழுத்தவும். அழுத்திய பிறகு sudo dpkg -i google-chrome-stable_current_i386.deb என தட்டச்சு செய்து Enter Key ஐ அழுத்தவும்.



libxss1 பொதி நிறுவப்படாமல் இருக்கும். அதனால் பிழைச்செய்தி காண்பிக்கும். அதற்கு sudo apt-get -f install எனும் கட்டளையை இயக்க வேண்டும். இந்த கட்டளையை இயக்கியபிறகு libxss1 பொதி நிறுவப்பட்டு விடும் அதோடு குரோம் உலாவியும் நிறுவப்பட்டு விடும்.


அதன்பின் Dash Home ற்குச் சென்று chrome என தட்டச்சு செய்தால் உங்களுக்கு குரோம் உலாவி கிடைக்கும்.



No comments: