Nov 21, 2013

பழைய கணினியில் உபுண்டு லினக்ஸ்






அண்ணன் சோம.நீலகண்டன் அவர்கள் ஒரு பழைய HCL நிறுவன மேசைக்கணினி வைத்திருக்கிறார். அந்த கணினியில் அவர் செய்யும் அதிக பட்ச வேலைகள் கணினியில் வட்டுகளைப் போட்டு திரைப்படம் பார்ப்பது, பாடலகள் கேட்பது, மின்னஞ்சல் அனுப்புவது, யூடியூப்பில் காணொளிகள் காண்பது, இணையத்தில் நாளிதழகள் படிப்பது ஆகியவைகள் தான்.

40 GB Hard Disk, Pentium 4 Processor, 512 MB RAM இதுதான் அவருடைய கணினியின் வன்பொருள் விபரம்.

அவர் விண்டோஸ் எக்ஸ்.பி இயங்குதளத்தைதான் பயன்படு வந்தார். அவரிடம் லினக்ஸ் இயங்குதளத்தின் சிறப்புக்களையும், பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், அவரினுடைய பயன்பாட்டிற்கு உபுண்டு லினக்ஸ் எந்தளவிற்கு ஒத்துழைக்கும் என்பதையும் எடுத்துக் கூறினேன். அவரும் ஏற்றுக்கொண்டு உபுண்டுவை நிறுவச்சொன்னார்.

உபுண்டு 12.04.1 LTS பதிப்பை நிறுவினேன். அவர் நீண்டகாலமாக விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி வந்தார் என்பதால் gnome-classic ஐ நிறுவினேன். அதன்பின் ubuntu-restricted-extras, Mobile Media Converter, Google Chrome, Chromium, தமிழ் தட்டச்சு வசதி ஆகியவைகளை நிறுவினேன். பழைய கணினியாக இருந்தாலும் சிறப்பாக  உபுண்டு இயங்குகிறது. 166 MB RAM நினைவகத்தை மட்டுமே தொடக்கத்தில் எடுத்துக்கொள்கிறது.

Google Chrome மிகவும் மெதுவாகத்தான் இயங்குகிறது. முகநூல் போன்றவைகளை பார்வையிட்டால் இன்னும் மெதுவாக வேலை செய்கிறது. ஆனால் Chromium சிறப்பாகவும் வேகமாகவும் இயங்குகிறது. ஆகையால் Google Chrome ஐ அந்த கணினியில் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன்.

கணினியின் விபரங்களையும் மற்றவைகளையும் மேலே Screenshot எடுத்து போட்டுள்ளேன் பாருங்கள்.  நமது தோழர்கள், நண்பர்கள் வீட்டில் இருக்கும் பழைய கணினிகளில் அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் போராடி வந்தால் அவர்களுக்கும் உபுண்டு லினக்ஸை நிறுவிக் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தலாமே!

No comments: