Feb 8, 2012

உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துகொள்வோம்

நாம் எல்லோரும் மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று, நான் இந்த பொருளை இத்தனை வருடங்களாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்பது. அட இதுநாள் வரையிலும் எந்த பிரச்சனையுமே வந்ததுயில்லீங்க!!!. என கூறக் கேட்டிருப்போம்.(இது நாம் பல்துலக்க பயன்படுத்தும் பிரஷிலிருந்து , செல்போன் வரை)

அதுபோல, நாம் பயன்படுத்தும் உபுண்டு லினக்ஸினையும் நிறுவி எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என தெரிந்துகொள்ளவும் நமக்கெல்லாம் ஆசையாக இருக்கும். தெரிந்துக்கொண்டு என்ன தம்பி பண்ணுறதுனு கேட்கிறீங்களா, மற்றவர்களிடம் கூறி பெருமைப் பட்டுக்கொள்ளளாமில்லையா !!!.

நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உபுண்டு லினக்ஸ் நிறுவிய தேதியினை தெரிந்துக்கொள்ள நிறைய வழிகள் இருக்கிறது. அதில் இரண்டு வழிகளினை மட்டும் இங்கு பார்ப்போம்.

வழி ஒன்று:

sudo ls -al /var/log/installer/syslog என்ற கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். படம் - 1 னைப் பார்க்கவும்.


படம் -1

வழி இரண்டு:

sudo cat /var/log/installer/syslog | less

கட்டளையின் மூலம் தெரிந்துக்கொள்வது. இந்த கட்டளையினை கொடுத்தவுடன் உங்களுக்கு நிறைய செய்திகள் கிடைக்கும் அதில் முனையத்தினுடைய இடதுபுறமாக தேதி காண்பிக்கப்படும். அதுதான் நாம் உபுண்டு நிறுவிய தேதி. பார்க்க படம் -2 மற்றும் படம் -3

படம் -2

படம் -3
படம் -3 -ல் உள்ளதுப் போன்ற செய்திகள் கிடைக்கும் திரையினை விட்டு வெளியேற Q - Key -னை அழுத்தவும்.

நான் உபுண்டு 10.10 பதிப்பு பயன்படுத்துகிறேன். நிறுவிய தேதி 21/05/2011 . அட என்னோட உபுண்டு நிறுவி முழுமையாக 8-மாதம் ஆகியிருச்சுங்க. அட இதுவரையிலும் எந்த பிரச்சினையும் இல்லீங்க!!!!!!!.

சரி விண்டோஸ் இயங்குதளம்? அட இந்த 8-மாதத்திற்குள் 3-முறை மறு நிறுவல் செய்து விட்டேங்க. விண்டோஸ் இயங்குதளம் 3-மாதத்திற்கு மேல் தாங்குவதெல்லாம் ஒரு பெரிய சாதனைங்க!!

5 comments:

mani said...

good work.. keep going...

இரா.கதிர்வேல் said...

நன்றி Mani.

அணில் said...

உங்களுக்கு லினக்ஸ் பிடிச்சிருக்குன்னு ஒத்துக்குறேன். அதுக்காக விண்டோஸை இப்படியா வறுப்பது?

இரா.கதிர்வேல் said...

//ந.ர.செ.ராஜ்குமார் Said//
விண்டோஸ் இயக்குதளத்தின் மீது வெறுப்பெல்லாம் ஒன்றுமில்லை தோழா.
எனக்கு நடந்த சம்பவத்தை, எதார்த்தமாக இருக்குமே என்று கூறினேன். அவ்வளவுதான்.

இரா.கதிர்வேல் said...

நன்றி தோழர் ந.ர.செ.ராஜ்குமார்.