Jun 5, 2010

Nokia Xpress Music 5310c அலைபேசியில் Aritel GPRS வசதியினைக் கொண்டு உபுண்டு 9.04 ல் Internet Connect செய்வது எப்படி?

இன்று கணினி பயன்படுத்தும் அனைவரும் Internet என்ற இணையவசதியினை பயன்படுத்துகின்றனர்.இந்த இணைய சேவையை நிறைய நிறுவனங்கள் அவர்களுடைய பாணியில் வழங்குகின்றனர்.முந்தைய நாளிலெல்லாம் எனக்கு தெரிந்து இண்டர்நெட்டை பயன்படுத்த Dial Up modem த்தைக்கொண்டு BSNL தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து Dial up account னினை பெற்று அதன்மூலம் இணையத்தை பயன்படுத்தி வந்தோம்.ஆனால் இன்றைய நாளிலோ நிலைமையே வேறு ஏனென்றால் இணையத்தை பயன்படுத்த எத்தனை வசதிகள் Reliance Netconnect stick, Tata Indicam Net Stick, Airtel Net Stick, MTS net Stick, BSNL net Stick, BSNL broadband, Reliance Broadband, Airtel Broadband இன்னும் எத்தனையோ வசதி இது தவிர செல்பேசிகளில் GPRS வசதியின் மூலம் இணைய வசதி இவ்வாறு இணையத்தை பயன்படுத்த எவ்வளவோ வழிகள்.இந்த வசதிகளிலேயே மிகவும் எளிமையாக குறைவான கட்டணத்தில் இணையத்தை பெற ஒரே வழி செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் GPRS வசதிதான்.என்ன ஒன்று உங்களுடைய செல்பேசி GPRS வசதியுள்ள செல்பேசியாக இருக்க வேண்டும்.GPRS வசதியின் மூலம் பெறப்படும் இணைய இணைப்பின் வேகம் குறைவாகத்தான் இருக்கும்.நான் இந்த வலைப்பூவினை படத்துடன் விளக்கி எழுதும் அளவிற்கு வேகம் போதுமானதாக இருக்கிறது.தரவிறக்கம் வேகம் ஒரளவு உள்ளது நான் இறுதியாக எழுதிய நான்கு பதிவுகள் இந்த வசதியினைக் கொண்டுதான் எழுதப்பட்டது.நீங்கள் GPRS வசதியுள்ள எந்த நிறுவனத்தின் செல்பேசி வைத்திருந்தாலும் அந்த நிறுவனத்தினுடைய செல்பேசியுடன் ஒரு வட்டுக்கொடுப்பார்கள் அதில் உள்ள மென்பொருளை நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தில் உங்கள் செல்பேசியில் உள்ள GPRS வசதிமூலம் விண்டோஸ் இயங்குதளத்தில் இணையத்தில் உலாவலாம்.ஆனால் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்தில் செல்பேசியினை கணினியுடன் இணைப்பதற்கான மென்பொருளகளை வழ்ங்குவதாக தெரியவில்லை ஆனால் எந்த மென்பொருள்களின் உதவியல்லாமல் உபுண்டு லினக்ஸில் நாம் செல்பேசியில் உள்ள GPRS வசதியின் மூலம் உபுண்டு லினக்ஸில் Internet Connect செய்து பயன்படுத்தலாம்.நான் இங்கு கொடுத்துள்ளது Nokia Xpress Music 5310c செல்பேசி மற்றும் Airtel Sim card க்கானது.ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த வழிமுறை Nokia செல்பேசிக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனங்களினுடைய செல்பேசிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் நான் nokia செல்பேசி மட்டுமில்லாது என் நண்பர் இரா.குமரேசன் அவர்களினுடைய LG மாடல் செல்பேசி, பிரகாஷ் அவர்களினுடைய Samsung மாடல் செல்பேசி, யோகேஷ் அவர்களினுடைய Samsung corby மாடல் செல்பேசி ஆகியவைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
Nokia Xpress Music 5310c,Airtel GPRS இவற்றைக் கொண்டு எப்படி இணையத்தை இணைத்தேன் என்பதை விளக்கமாக கூறிவிடுகிறேன்.
  • முதலில் என்னுடைய செல்பேசியில் Airtel GPRS Setting -யினை Airtel நிறுவனத்திடமிருந்து வாங்கி செல்பேசியில் சேமித்துக்கொண்டேன்.செல்பேசியினை off செய்து on செய்தேன்.
  • Menu => internet => Browser சென்று இணையதள முகவரிகளைக்கொடுத்தேன் மிக அழகாக இணைந்ததுடன் இணையத்தில் உலாவ முடிந்தது.சரி செல்பேசி பக்கம் உள்ள வேலைகள் முடிந்து விட்டது.அடுத்து உபுண்டு 9.04 லினக்ஸ் பக்கமாக உள்ள வேலைகள் அதை படத்துடன் காண்போம்.
  • செல்பேசியினுடைய Data Cable -னை கணினியுடைய USB port ல் இணைத்தேன்
  • System => Preferences சென்று Network Connections என்பதை தேர்வு செய்து Click செய்யுங்கள்.படம் இரண்டில் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-1

படம்-2
  • படம்-2 -ல் உள்ள திரையில் Mobile Broadband என்பதை தேர்வு செய்து Add Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் படம்-3 உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்
படம்-3
  • படம்-3 உள்ள திரையில் Forward Button ஐ அழுத்துங்கள்.Forward Button ஐ அழுத்தியவுடன் படம்-4 -ல் உள்ளது போன்ற திரைக்காண்பிக்கப்படும்

படம்-4
  • படம்-4 ல் உள்ளது திரையில் Country என்பதற்கு கீழ் India வையும், Provider என்பதற்கு கீழ் Airtel என்பதையும் தேர்வு செய்யவும் நீங்கள் Airtel அல்லாமல் வேறோரு sim card அதாவது vodafone,BSNL வைத்திருந்தால் அவற்றை தேர்வு செய்யவும்.இவற்றையெல்லாம் தேர்வு செய்து Forward Button ஐ அழுத்துங்கள் அழுத்தியவுடன் படம்-5 உள்ளதுபோன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-5
  • படம்-5 -ல் Apply என்பதை click செய்யுங்கள்.Apply என்பதை click செய்தவுடன் படம்-6 -ல் உள்ளது போன்ற திரைக் காண்பிக்கப்படும்.
படம்-6
  • படம்-6 -ல் உள்ள திரையில் Airtel என்பதை தேர்வு செய்து Edit Button ஐ click செய்யுங்கள்.click செய்தவுடன் படம்-7 ல் உள்ள திரைக் காண்பிக்கப்படும்.
படம்-7
  • படம்-7 ல் உள்ள திரையில் Connect Automatically எனபதை டிக் செய்து Apply Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் ஒரு சில வினாடிகளில் Connection Establish ஆகி விடும் பார்க்க படம்-8
படம்-8
இணைப்பு கிடைத்த பிறகு நெருப்பு நரியில் என்னுடைய வலைப்பூ

இணைப்பை துண்டிக்க Disconnect என்பதைக் click செய்யவும்

13 comments:

சூர்யா ௧ண்ணன் said...

நல்ல தகவல் ! மிக்க நன்றி! தொடரட்டும் உங்கள் சேவை!..

இரா.கதிர்வேல் said...

உங்களுடைய வருகை எனக்கு பெரும்மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி சூர்யா கண்ணன்

arulmozhi r said...

நல்ல தகவல். நோகியா லினக்ஸ்கென்று எந்த நிரலையும் தரவில்லை. ஆனால் விஎல்சி மற்றும் டோடம் மூவி பிளேயர் போன்றவை அந்த நிரலின் வேலைகளை செய்கிறது. gp வடிவ கோப்புகளை இயக்குகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி

Anonymous said...

அனைவருக்கும் புரியும்படி பொறுமையாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.

Anonymous said...

சூர்யா கண்ணன் வலைப்பூ தமிழை உங்கள் லினக்ஸில் சரியாக படிக்க முடிகிறதா?

இரா.கதிர்வேல் said...

// arulmozhi r said...
நல்ல தகவல். நோகியா லினக்ஸ்கென்று எந்த நிரலையும் தரவில்லை. ஆனால் விஎல்சி மற்றும் டோடம் மூவி பிளேயர் போன்றவை அந்த நிரலின் வேலைகளை செய்கிறது//
நன்றி arulmozhi sir உங்களினுடைய பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இரா.கதிர்வேல் said...

//ஷிர்டி.சாய்தாசன் said...
சூர்யா கண்ணன் வலைப்பூ தமிழை உங்கள் லினக்ஸில் சரியாக படிக்க முடிகிறதா?//
என்னுடைய உபுண்டு9.04 லினக்ஸில் சூர்யா கண்ணன் அவர்கள் வலைப்பூ தமிழ் சரியாக தெரியவில்லை

இரா.கதிர்வேல் said...

//ஷிர்டி.சாய்தாசன் said...
அனைவருக்கும் புரியும்படி பொறுமையாக விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.//
நன்றி ஷிர்டி.சாய்தாசன் சார்
ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் புரியும்படியாக அமையவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை சார் உங்களைப்போன்றவர்களின் பின்னூட்டம் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியளிக்கிறது.

arulmozhi r said...

//ஷிர்டி.சாய்தாசன் said...

சூர்யா கண்ணன் வலைப்பூ தமிழை உங்கள் லினக்ஸில் சரியாக படிக்க முடிகிறதா?//

இல்லை படிக்க முடியவில்லை. commentsல் சென்றால் படிக்க முடிகிறது

Kumaresan Rajendran said...

நல்ல தகவல், மொபைல் மூலமாக இண்டர்நெட் பயன்படுதுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மணிகண்டன்.பா said...

மேலும் வளர வாழ்த்துகள்

Inr said...

திறம்பட விலகிய நண்பருக்கு மிக்க நன்றி..
வாழ்த்துக்கள்..

Inr said...

திறம்பட விளக்கய நண்பருக்கு நன்றி...
வாழ்த்துக்கள்..