Feb 17, 2010

தமிழா கணினியில் தமிழ் மொழியை பயன்படுத்தி புரட்சி செய்திடு


தமிழ் நாட்டில் உள்ள தமிழன் தமிழை மறந்து மேற்க்கத்திய கலாச்சாரத்தின் மீது
மோகம் கொண்டு தமிழில் உரையாடுவதையும், தமிழில் எழுதுவதையும் கௌரவ குறைச்சலாக நினைக்கிறான்.முக்கியமாக படித்தவர்கள்.ஒரு காலத்தில் கணினியில் தமிழை பயன்படுத்துவது என்பது கடினமான காரியமாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலைமையே வேறு. இன்று கோடிக்கணக்கான வலைப்பூக்கள் தமிழ் மொழியில் தமிழர்களால் எழுதப்படுகின்றது.லினக்ஸ் இயங்கு தளங்கள் தமிழ் மொழியில் உள்ளது.மைக்ரோசாப்ட் தமிழ் மொழிக்கு இடம் கொடுக்கிறது.கூகிள் தன்னுடைய முக்கியமான சேவைகளில் எல்லாம் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .எடுத்துக்காட்டாக தமிழில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமானால் உங்களிடம் gmail லில் மின்னஞ்சல் கணக்கு இருந்ததால் நீங்கள் மிகவும் எளிதாக தமிழில் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இன்று இணைய தளங்கள் தமிழ் மொழியால் எழுத்தப்பட்டு , அலங்கரிக்கப்பட்டு அறிவுச் சுடர் வீசிக்கொண்டு இருக்கிறது.விக்கி பிடியா வில் தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளது.இன்று தமிழில் தட்டச்சு செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளது . இது போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தமிழன் இன்னும் தமிழ் மொழியை பயன்படுத்த முழுமூச்சாக முயற்ச்சிக்கவில்லை .நான் பொறியியல் படுத்துக்கொண்டிருக்கும் மாணவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த அனுபவத்தை கூறுகிறேன் .என்னுடன் படிக்கும் பாதிக்கும் மேற்ப்பட்ட சக நண்பர்களுக்கு கணினியில் தமிழை பயன் படுத்துவது எப்படி என்ற வழி முறை கூட தெரிய வில்லை .
விரும்பிய மொழியெல்லாம் கற்றிடு உன் விழி போல் தமிழை காத்திடு என்று ஒரு கவிஞன் கூறியுள்ளான் .

அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒரு மொழி என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது . உலகத்தில் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி என்ற கருத்தை தமிழன் பொய்யாக்கி விடக் கூடாது.தமிழ் நாட்டில் கணினி துறை சார்ந்த கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும்.தமிழ் மொழியை கணினியில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தல்லாம் என்று விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.கணினி துறைச் சார்ந்த தொழில்நுட்பங்களை தமிழ் மொழியில் அளித்திட வேண்டும்.தமிழன் எதற்கும் சளைத்தவனில்லை என்று உலகிற்கு தெரியபடுத்த வேண்டும்.அதே நேரத்தில் உலகம் ஒரு கிராமமாக ஆகிவிட்ட நிலையில் ஆங்கில மொழியும் அவசியமாகிறது.கணினி துறை மட்டுமல்லாமல் ,பிற துறைகள் பயிலும் மாணவர்களும் ஆங்கில மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து,அதன் மூலம் தங்களுடைய துறையில் வல்லுனர்களாகி தங்களுடைய துறைச் சார்ந்த செய்திகளையும் ,விஷயங்களையும் ,தொழில் நுட்பங்களையம் தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு அளித்திடல் வேண்டும்.

தமிழன் ஒற்றுமையுடன் இருந்து இன்னும் பல சாதனைகளை புரிந்திடல் வேண்டும்.

No comments: